சாய்ந்தமருது சிறுமி மர்யம் ஜெஸீம் இலண்டனில் சர்வதேச " ஸ்டெம் " விருதுக்கு தெரிவு!அஸ்ஹர் இப்றாஹிம்-
"ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக இலண்டனில் வதியும் சாய்ந்தமருது சிறுமி மர்யம் ஜெஸீம் தன்னை சான்றுப்படுத்தி சர்வதேச புகழ் பெற்ற "ஸ்டெம் விருது"க்கு இரு பிரிவுகளில் தெரிவாகி உள்ளார் .

இங்கிலாந்தின் பிரபல நகரங்களில் ஒன்றான மில்டன் கீன்ஸ் நகரில் முதல் முறையாக தொடக்கி வைக்கப்படும் உலகின் பிரசித்தி பெற்ற ஸ்டெம் விருது 2024 விருதுக்கு இங்கிலாந்தில் பல பாகங்களில் இருந்தும் கிடைக்கப் பெற்ற நூற்று கணக்கான ஸ்டெம் நிகழ்ச்சி திட்டங்களில் இருந்து விருது பெற தெரிவான இறுதி தேர்வாளர்களில் ஒருவராக மர்யம் ஜெஸீம் இடம் பிடித்த்துள்ளார் .

அதிலும் குறிப்பாக இச் சிறுமி பாடசாலை மற்றும் உயர் கல்வி சார்ந்த மாணவர் நட்சத்திரப் பிரிவு மற்றும் , மாற்றீட்டு சிந்தனையாளர் , ஒளி விளக்காளர் பிரிவு என்ற இரண்டு பிரிவுகளில் விருது பெற தகுதி பெற்றுள்ளார் .
ஸ்டெம் கல்வி (Science, Technology, Engineering, Mathematics ) முறை என்பது விஞ்ஞானம் , தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் துறைகளை ஒருங்கிணைத்த கல்வி முறை .

அல்குர்ஆனை அழுத்தம் திருத்தமாக பாரம்பரிய மத்ரஸா கல்வியை நாடாதும் ஸ்டெம் கல்வி முறையின் ஊடாக சுயமாக பயின்றும் தேர்ச்சி பெறலாம் என்பதை தனது வாழ்வியல் சான்றுகளின் ஊடாக சமர்ப்பித்த திட்டமே உலக பிரசித்தி பெற்ற ஸ்டெம் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் விருது பெற தகுதி பெற்றுள்ளது
இவ்விருது பெற தெரிவான இறுதி தேர்வாளர்களுள் மர்யம் ஜெஸீம் மட்டுமே ஒரு இளம் வயது சிறுமியாக பரிணமிக்கிறார் .

இச் சிறுமி தெரிவான பிரிவுகளில் தேர்வான இறுதி தெரிவாளர்களுள் உயர்கல்வியை தொடரும் மாணவர்களும் , தொழில்சார் நிபுணர்களும் , உயர்கல்வி மற்றும் தொழில் சார் நிபுணர்களும் தெரிவாகி உள்ளனர் .

இவர்களுடன் பதினொரு வயதுடைய மர்யம் ஜெஸீமின் செயற்பாட்டு திட்டங்கள் இவ்விருதில் பணியாற்றிய பல நடுவர்களை ஈர்த்து இறுதி தேர்வாளர்களுள் ஒருவராக மர்யம் தெரிவு பெற செய்திருப்பது அல் குர்ஆனை திறம்பட பயில்வதில் செல்வாக்கு செலுத்தி உள்ள ஸ்டெம் அணுகு முறையும் அதன் ஊடாக பெற்ற தேசிய மற்றும சர்வதேச அடைவுகளும் ஆகும் . இது இச் சிறுமியின் வாழ்வில் இன்னுமொரு மைல் கல் மற்றும் வரலாற்று சாதனை ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :