NFGGயின் ஏறாவூர் செயற்குழு நியமனம்!



NFGGஊடகப் பிரிவு-

ல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏறாவூருக்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 04.11.2017 ஏறாவூரில் நடை பெற்ற NFGGயின் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தின் போதே இந்த செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நழீமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

NFGGயின் எதிர்கால செயற்திட்டங்கள், குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விரிவான விளக்கங்களை NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் வழங்கினார். NFGGயின் நிர்வாகிகள் தெரிவு நடை முறை மற்றும் தலைமைத்துவ கட்டமைப்புத் தொடர்பான விளக்கங்களை தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் செயற்குழுவிற்கான தெரிவு இடம் பெற்றதோடு நிர்வாகப் பொறுப்புக்களுக்கான தெரிவுகளும் இடம் பெற்றன.

அந்த வகையில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

MLM. சுஹைல் (ஆசிரியர்) - பொறுப்பாளர்

AR. தில்சான் - உதவிப் பொறுப்பாளர்.
AMM. ஜெமீல் (கோட்டக்கல்வி அலுவலகம், ஏறாவூர்)- செயலாளர்
AS. றமீஸ் (நழீமி, ஆசிரியர்) - உப செயலாளர்
IM. இஸ்ஹாக் - பொருளாளர்

ஏனைய செயற்குழு உறுப்பினர்களாக பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

NM.ஜாபிர் (பிரதேச செயலகம், செங்கலடி)
M. பைரூஸ் (ஆசிரியர்)
MIM. பஸ்மி (பொது சுகாதார பரிசோதகர்)
MYM. ரூமி (நீர்ப்பாசன திணைக்களம்)
PK.சபுர்தீன்
A.அப்துர் ரவூப்
MIM. ஹாரிஸ்
SH.அமீர்
MA.பஸ்மீர்
T. றிபாய்தீன்(பிரதேச செயலகம்)
M. ஜவாஹிர் மௌலவி
M.முபாஸ். (அலிகார் தேசிய பாடசாலை)
MLM. சுக்ரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -