அனுபவரீதியாக சித்த, ஆயுர்வேத வைத்தியம் செய்பவர்களுக்கு பூரண கல்வியினை கொடுப்பதே எமது நோக்கம்…Dr.முனாசிக்


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்- 

னுபவரீதியாக சித்த, ஆயுர்வேத வைத்தியம் செய்பவர்களுக்கு பூரண கல்வியினை கொடுப்பதே எமது நோக்கம்…Dr.முனாசிக் - Dr.MHM.Munaseek –MD(Russia), Msc(Psychology, Dip in Ayurvedic , Dip in Diabetalogy.(India )

வீடியோ- ஆயுர்வேதம் மருத்துவம் சம்பந்தமாக வைத்தியர் முனாசிக்கின் விளக்கம்:- www.youtube.com/watch?v=DtpTWq8ZZPY&feature=youtu.be

உண்மையில் நமது நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் ஆங்கில வைத்தியத்தினால் கைவிடப்படுகின்றவர்கள் ஆயுர்வேத வைத்திய முறை மூலம் குணமாகுவதனை நேரிலும், பத்திரிகைகளிலும், ஏனைய ஊடகங்கள் மூலமாக பரவலாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் எமது நாட்டினை பார்க்கின்ற பொழுது சித்த வைத்தியதுக்கு ஒருவர் என்றும் பாரம்பரிய வைத்தியத்துக்கு ஒருவர் என்றும் கிராமத்துக்கு கிராமம் வைத்தியத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களை அழைத்து பல கேள்விகளை தொடுக்கின்ற பொழுது பரம்பரை பரம்பரையாகவும், 

அனுபவ ரீதியாகவுமே அந்த வைத்தியத்தினை மேற்கொள்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது அவர்கள் மூலமாக தெளிவாகின்ற விடயமக இருந்தது. அந்த வகையில் இன்று நாங்கள் பார்க்க போனால் இளம் வாலிபர்கள் கூட அந்த வைத்தியத்தினை மேற்கொள்கின்றவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையிலேயேதான் நான் சிந்தித்தேன் பரம்பரை பரம்பரையாக பழகிகொண்டவர்களே இவ்வாறு வைத்திய சேவையினை மேற்கொள்கின்ற பொழுது.! ஏன் இவர்களுக்கு ஆயுர்வாத வைத்தியம் சம்பந்தமான கல்வியினை வழங்கி மேலும் ஆயுர்வேத வைத்தியத்தினை திறம்பட மேற்கொள்ள செய்ய முடியாதா.? என நினைத்தே நான் ஆயுர் வேத வைத்திய சேவையினை மக்களுக்கு வழக்குவததோடு. COLLEGE OF HELTH SCIENCE MEDICAL CAMPUS எனும் பல்கலை கழகத்தினை நிறுவி அனுபவரீதியாக சித்த, ஆயுர்வேத வைத்தியம் செய்பவர்களுக்கும், வைத்திய துறையில் ஆர்வம் உள்ள இளம் தலைமுறையினருக்கும், சித்த ஆயுர்வேத, பாராம்பரிய வைத்தியர்களை எடுத்து பூரண ஆயுர்வேத கல்வியினை கொடுத்து வருகின்றேன். 

இது 2010ம் ஆண்டிலிருந்து நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவிக்கிறார் சித்த ஆயுர்வேத வைத்தியரும், அதனோடு சேர்த்து ஆங்கில வைத்தியத்தினையும் கற்றுள்ள வைத்தியர் முனாசிக்.

வைத்தியர் முனாசிக்னை எடுத்துக்கொண்டால் ஆயுர்வேத வைத்திய சம்பந்தமாக மூன்று வருட கற்கை நெறியினை இந்தியாவில் பூர்த்தி செய்துள்ளதுடன், அதற்கு பிற்பாடு மேலைத்தேய ஆங்கில வைத்தியத்தினை கற்றுகொள்ளும் பொருட்டு றஸ்யா நாட்டுக்கு சென்று அத்துறையில் MD பட்டத்தினையும் பெற்றுள்ளார். 

அதற்கு பிற்பாடுதான் வைத்தியர் முனாசிக்கு ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாகவும், சமூக சிந்தனையின் அடிப்படையிலுமே இலங்கையில் ஆயுர்வேத வைத்திய கற்கை நெறிக்கான பல்கலை கழகத்தினை ஆரம்பித்து ஆயுர்வேத வைத்திய கற்கை நெறிகளை வழங்கி வருகின்றார். 

இதன் தலைமை காரியாலயமானது இஸ்டேசன் வீதி தெஹிவலை, கொழும்பு எனும் விலாசத்தில் அமைந்துள்ளதுடன் 0117224221,0767007978,0758599410 என்ற இலக்கங்களோடு தொடர்பு கொண்டு நோய்களுக்கான ஆயுர்வேத வைத்தியம் சம்பந்தமாகவும், பல்கலைகழகத்தில் கற்பிக்கப்படும் ஆயுர்வேத கற்கை நெறிகள் சம்பந்தமாக அறிந்துகொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு பல்கலை கழகங்களுடன் இணைந்து மருத்துவ துறையுடனான கற்கை நெறிகளையும், ஏனைய துறையிலான பட்ட படிப்புக்களையும் குறித்த பல்கலை கழகமானது வழங்கிவருகின்றது. இலங்கையில் முதல் முறையாக LLB பட்டப்படிப்பினை ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதும் முக்கிய விடயமாகும், அது மட்டுமல்லாமல் BA, Bcom, BBA, Bsc, Master Degree, MA, M.Com, Msc, அத்தோடு இலங்கை திறந்த பல்கலைகழகத்துடன் சேர்ந்து மேலும் பல கற்கை நெறிகளை முன்னெடுக்க உள்ளது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. 

இத்தனைக்கும் அப்பால் ஆயுர்வேத வைத்தியத்துக்கான சகல விதமான மருந்துகளையும் உள்ளடக்கியதான மருந்தகத்துடன் சேர்த்து, வெளி நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யும் அளவிற்கு ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றார் வைத்தியர் முனாசிக்.

மேலும் மேலும் தனது வைத்திய சேவையினை மற்றும் சமூக சேவையாக மட்டுப்படுத்தாமல் தான் வைத்திய துறை மூலமும் , பல்கலை கழகத்தின் மூலம் சம்பாதிக்கும் இலாபத்தில் ஒரு பங்கினை சக்காத் , சதக்கா என்ற வகையில் இல்லாத மக்களுக்கு வழங்கி வரும் அதே நேரத்தில் குறித்த ஆயுர்வேத வைத்தியம் சம்பந்தமாகவும், நோய்கள் சம்பந்தமாகவும், ஆயுர்வேத வைத்தியத்துக்கும், ஆங்கில மருத்துவத்துக்கும் இடையிலான வேறுபாடுகள், ஆயுர்வேத வைத்திய கற்கை நெறிகளுக்காக வைத்தியர் முனாசிக்கினால் நடாத்தப்பட்டு வருகின்ற பல்கலை கழகம் சம்பந்தமாகவும் கேட்கப்பட்ட கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளுக்கு வைத்தியர் முனாசிக்கினால் தரப்பட்ட விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Dr.MHM.Munaseek –MD(Russia), Msc(Psychology, Dip in Ayurvedic , Dip in Diabetalogy.(India ) Conduct Number – 07508599410, 076 7007978
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -