பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கிருபவதி சிவதீபன், உதவி விவசாய பணிப்பாளர் மேரிஆஞ்சலா லக்சன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் (மாங்குளம், தண்டுவான்), கிறிசலிஸ் நிறுவன வட மாகாண பணிப்பாளர் ம. பிரபாகரன், திட்ட முகாமையாளர் ச. தேவதாஸ், சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, ஒலுமடு, அம்பகாமம் போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் வயல் வியாபாரப் பாடசாலை குழுக்களின் சார்பில் பங்கேற்றனர்.
விவசாயிகள் காட்சிப்படுத்திய சிறந்த நடைமுறைகள்
பொருத்தமான நில பண்படுத்தல்
தரமான விதை பயன்பாடு
வரிசை விதைப்பு
பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி
விதை பரிகரணம்
ஜிப்சம் பயன்பாடு
தூவல் நீர் பாசன பயன்பாடு
உரம் பயன்பாடு
ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு (IPM)
தரமான விதை உற்பத்தி
இயந்திரங்களின் பயன்பாடு
சிறப்பு காட்சிகள்
விவசாய இயந்திரங்கள் காட்சிப்படுத்தல்
நிலக்கடலை விற்பனை பகுதி
பெறுமதி சேர் உற்பத்தி பகுதி
பல்வேறு பயிர் செய்கை துண்டங்கள்
பயிர் சிகிச்சை மையம்
மாவட்ட விவசாய பண்ணையின் நாற்றுகள், கன்றுகள் விற்பனை பகுதி
நிகழ்வில் விவசாயிகளே தலைமையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தமது முன்னேற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவதோடு, எதிர்கால நிலக்கடலை செய்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.
இந்நிகழ்வு, கலந்து கொண்ட அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று, விவசாயிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


.jpg)








0 comments :
Post a Comment