தலைமறைவாகி இருந்த ராஜிதவுக்கு விளக்கமறியல்!



நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (29) ஆஜரானார்.

அவரை, அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளின் மேல் நீதிமன்றத்தால் இன்று (29) காலை விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

கிரிந்த மீன்வள துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :