தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் புதிய மாணவர்கள் இணைந்து கொண்ட நிகழ்வு!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மான்சூர் ஞாபகார்த்த கூட்ட அரங்கில் 2025.09.01 ஆம் திகதி இடம்பெற்றது. தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் முன்னிலையில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்  விரிவுரையாளர் எஸ்.எல். றஷ்மியா பேகத்தின் வழிகாட்டுதலிலும் இந்த நிகழ்வு அமைந்தது.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக் பதில் பதிவாளர் எம் ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன், மாணவர்களையும் பெற்றோர்களையும் இதயப்பூர்வமாக வரவேற்று, பல்கலைக்கழக வாழ்க்கை பாடசாலையைவிட வேறுபட்டது என்பதையும், புதிய விடுதி மற்றும் ஆங்கிலமொழி மூலமான கற்கைகள் போன்ற சவால்கள் எதிர்கொள்வதை முன்னிட்டு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“இலவசக் கல்வி” என்பது அரசின் நிதியுதவி பெற்ற கல்வி என்பதால், மாணவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், கல்வியுடன் சேர்ந்து பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் மேலும், பல்கலைக்கழகத்தில் ரேக்கிங், வன்முறை போன்ற தீவிர செயல்களில் ஈடுபட கூடாது என்று மாணவர்களை வேண்டிக்கொண்டார். மாணவர்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் கல்வி பயணத்தை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், தனது உரையில் மாணவர்களுக்கு பீடம் வழங்கும் கல்வி வளங்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக சேவைகள் குறித்து விளக்கி, புதிய மாணவர்கள் முன்மாதிரியாக செயல்பட அவர்களை ஊக்குவித்தார்.

ICT துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கே. அஹமட் றிபாய் காரியப்பர், தனது உரையில் ICT துறை மாணவர்களுக்கு வழங்கும் நவீன பாடத்திட்டங்கள், புதுமை, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றிய உரையை வழங்கினார். “ICT துறையைத் தேர்ந்தெடுத்தது நவீன உலகத்தின் இதயத்தையே தேர்ந்தெடுத்தது போன்றது” என அவர் கூறி, மாணவர்களின் ஆர்வம் மற்றும் புதுமை முயற்சிகளுக்கு ஊக்கமளித்தார்.

BST துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.டி.என்.ரீ. குமார தனது உரையில் உயிர்க்கண அமைப்பியல் தொழில்நுட்பத் துறைக்கு புதிய மாணவர்களை வரவேற்று, பாடத்திட்ட தரம், ஆராய்ச்சி வாய்ப்புகள், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்பு போன்றவை மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த PROF–PROFAC கண்காட்சியில், 17 பல்கலைக்கழகங்களில் ஒரே தொழில்நுட்ப பீடமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் பங்கேற்றதை பெருமையாக எடுத்துரைத்தார்.

நிகழ்வில் பெற்றோர்களுக்காகவும் உரையாற்றி, அவர்களுக்கு மாணவர்களை நேர்மையாக வழிநடத்தும் பொறுப்பு மற்றும் ரேக்கிங் தவிர்ப்பில் அவர்களுடைய பங்கு முக்கியம் என வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகக் கல்வி என்பது பரீட்சைக்கு மட்டுமல்ல, நல்ல ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூக மதிப்பீடுகளை வளர்க்கும் வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில், ஒருங்கிணைப்பாளர் எஸ்.எல். றஷ்மியா பேகம் அனைவருக்கும் நன்றியுரையாற்றி விழாவை நிறைவு செய்தார். நிகழ்வு, புதிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்திலே உற்சாகத்தையும், கல்வி துறைகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :