சட்டத்தரணி இப்ராஹீம் எழுதிய "இப்ராஹிமின் இலட்சியக் கனவுகள்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று(05) கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் இலக்கியவாதியும் சட்டத்தரணி வேதாந்தியுமான சேகு இஸ்ஸதீன்,கௌரவ அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட அறிஞர் சித்திலெப்பை ஆய்வுமன்றத்தின் தலைவர்சட்டத்தரணி மர்சூம் மௌலானா, உட்பட இலக்கியவாதிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டணர். பிரதம அதிதியான சட்டத்தரணி இலக்கியவாதி சேகுஇஸ்ஸதீனுக்கு நூல் எழுதிய சட்டத்தரணி இப்ராஹீம் நூலின் பிரதியை வழங்கிவைத்தார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களும் ஒருவருக்கு நூலின் பிரதியை இதன்போது வழங்கி வைப்பதைக் காணலாம் .