வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் இன்று காலை முதல் முதல் பணி பகிகரிப்பில்












க.கிஷாந்தன், மு.இராமச்சந்திரன்,தலவாக்கலை பி.கேதீஸ்-

லிந்துலை வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் 13.11.2017 காலை முதல் பணி பகிகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் தாதியர் ஒருவருக்கு இடமாற்றம் பெற்று செல்லுமாறு கோரியை இவ் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன்றது.

வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளபோதிலும் சில தாதியர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் வைத்தியசாயின் தலைலைமை வைத்தியர் பிரபாஸ் கருநாயக்க கருத்து தெரிவிக்கையில் லிந்துளை வைத்தியசாலையில் பணி புரிந்த தாதியர் ஒருவர் நிர்வாகத்திற்கு தொடர்ந்துஇடையூரை ஏற்படுத்தி வந்ததுடன் கடமையை சரிவர செய்யாமலிருந்தமையினால் அவரை கொட்டகலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தோம் அந்த இடமாற்றத்தை இரத்து செய்துகொண்டு மீண்டுமே லிந்துலை வைத்தியக்கு கடமைக்கு வந்துள்ளார்,

  இவ்வாறானவர்கள் இந்த வைத்தியசாலையில் இருக்கும் பட்சத்தில் எமது கடமையை திறம்பட செய்ய முடியாது என்பதுடன் வரும் நோயாகளுக்கு சிறந்த சேவையையும் செய்யமுடியாது எனவே குறித்த தாதி வைத்தியசாலையை விட்டு இடமாற்றம் பெற்று செல்லும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்தார்,

இது தொடர்பில் குறித்த தாதி இரேச பரவிதான கருத்து தெரிவிக்கையில் நான் நிர்வாகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்க வில்லை எமது உரிமையையே கோரினேன் அத்தோடு நான் சட்ட ரீதியான இடமாற்றம் கிடைத்தால் நான் இங்கிருந்து செல்லதாயாராக உள்ளேன் அவ்வாறு இல்லாமல் வைத்தியரின் முறைபாட்டுக்கமைய வழங்கப்படும் இடமாற்றத்தை ஏற்று இங்கிருந்து செல்லமுடியாது என தெரிவித்தார் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பினால் சீகிச்சைக்காக வைத்திசாலைக்கு வருத்தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -