இருந்தும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான முஸ்லீம்கள் வாழ்ந்த போதும் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளோம்.
ஒருபுறம் மாவட்டத்தில் சிங்களப் பேரினவாதம் மறுபுறம் தமிழ் தீவிர சக்திகளின் அடக்குமறைகளால் இடையில் சிக்குண்டு சிதறடிக்கப்படுகிறோம்.
நமக்கான இருப்பு,அந்தஸ்து மற்றும் தனித்துவம் இன்று விலைபோன ஒன்றாகிவிடடது.
அரசியலை எதிர்க்கின்றவர்கள்,விமர்சிக்கின்றவர்கள் மற்றும் முற்போக்கான படித்த இளைஞர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம் அல்லது சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறோம்.
மாவட்டத்தின் சகல முஸ்லீம் பிரதேசங்களிலும் பிரதேசவாதமும் குட்டித் தலைவர்களின் அதிகரிப்பும் நம்மை நமக்கே எதிரிகளாக்கியுள்ளது. உலகமுஸ்லீம்களுக்காக கண்ணீர் சிந்தும் நம்மால் பக்கத்து வீட்டு முஸ்லீமின் உணர்வுகளை புரியமுடியாதுள்ளது.
மார்க்கத்தை பேசுபவர்கள்,மார்க்கம்சார்ந்த சபைகள் எல்லாம் அரசியல்மயமாகி விளம்பரம் தேடும் அமைப்பாகிவிட்டது.தலமைத்துவக் கட்டுப்பாடும் சமூக ஒற்றுமையும் சீர்குழைந்துள்ளது.
முற்போக்காக எழுதும் பேசுகின்றவர்கள் எல்லாம் காலத்துக்காலம் மட்டும் வந்துபோகும் ஈசல்பூச்சிகளாகவே உள்ளது.
இன்று அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டுதல்,நாடா வெட்டுதல் மற்றும் விளம்பரம் போன்றன முகநூளிலே ஓரிரு நாட்களில் முடிந்து போகிறது.
ஒருவேளைக்கு கஞ்சிகூட குடிக்க முடியாதவனுக்கு பந்தல் போட்டு புரியாணி பரிமாற உள்ளதாக கூறுவதில் பயன் என்ன?
மக்கள் தற்போது உங்களிடம் எதிர்பார்ப்பது
1-பட்டதாரிகளுக்கு வேளைவாய்ப்பு
2-இளைஞர்களுக்கு வேளைவாய்ப்பு
3-குறிஞ்சாக்கேணி பாலத்துக்கான நிர்மானம்
4-கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்த்தல்
5-சட்டவிரோத மண்அகழ்வை தடுத்தல்
6-மீனவர்களுக்கான தொழில் உத்தரவாதம்
7-பாடசாளைகளில் நிலவும் ஆளனி மற்றும் இடபற்றாக்குறைகள்
8-வறுமைக்கு தள்ளப்படும்விவசாய்கள் நிலை
9-ஊரில் இடையில் நிறுத்தப்பட்டுள்ள மறறும் ஊழல் நிறைந்த அபிவிருத்தி திட்டங்களை மீளாய்வு செய்தல்
10-சிங்கள் கடும்போக்காளர்களால் மதத்துக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் நிர்வாக ரீதியிலும் மாவட்டத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சதிகளை முறையடிப்பது.
சின்னதாக::
டெங்கிற்கு பின்னர் வைத்தியசாலை விடயம் முழுஉலக மக்களின் பார்வையும் நமது ஊரில் இருந்தது.
ஆர்ப்பாட்டம் நடாத்தினோம்
நீங்களும் பந்தியில்குந்தி படமெடுத்தீர்கள்
முதலமைச்சர் வந்தார்
ஏட்டுக்கு போட்டியாக அமைச்சர்கள் வந்தனர்
ஐனாதிபதியும் வந்தார்
உங்களால் ஒருநிமிடம் போதும் அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கு அல்லது ஐனாதிபதி அங்கீகாரம் வழங்குவதற்கு. கேவலம் உப்புச்சப்பு இல்லாத கதைகளைக்கூறி காலம்கடத்துகின்றீர்கள்.
அரசியல் தலமைகளின் சிறுபிள்ளைத்தனமான புதப்புது வில்லத்தனங்களுக்கு உலமாக்களை வைத்து சத்தியம் செய்ய வேண்டி உள்ளது.
தலைநகர் கொழும்புக்கு அறிமுகமாக முன்னராக AC பஸ் காந்தாங்குடியிலும், விசேட வசதிகளுடைய வைத்தியசாலை அம்பாறையிலும் 2005ம் ஆண்டுக்கு முன்னரே உதயமானது.
நமது ஊரில் விளையாட்டரங்கு,வைத்தியசால,கல்விக் கூடங்கள் கேவலம் பக்கத்து ஊரான கோமரங்கடவலயில் இருப்பதைவிட மோசமாக உள்ளது.
முகநூளில் உணர்ச்சிகளுக்கு தீனிபோடும் வகையில் கருத்துக்களையும் விவாதங்களையும் புரிகின்ற அரசியல்வாதிகளும் அவர்களின் சிலகுறிப்பிட்ட அடிவருடிகளும்
இனிவரும் காலங்களில் உங்களால் அரசியல் மூலம் உழைத்த வருமானம்,கொந்தராத்துக்காரர்களிடம் இலஞ்சமாக பணம் கோடிக்கணக்கில் பெற்றது தொடர்பாக ஆதாரங்களை வெளியிட முடியுமா? குறைந்த பட்சம் உங்கள் சேமிப்புகள் வெளியிட முடியுமா?
உழைப்பதற்கு இலகுவான மார்க்கமாகவும்,இழந்த சொத்துக்களை மீளப்பெறும் தொழிலாகவும் அரசியல் மாறிவிட்டது.
கண்மூடித்தனமாக உங்களால் முன்னெடுக்கப்படும் ஆதரவால் இந்த தலமைகள் நம்மை இலகுவாக ஏமாற்றவும் சூன்யமாக்கி வைத்திருக்கவும் வழிஏற்படுகிறது.இதில் குறிப்பாக அரசியல்வாதிகளின் எழும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் ஒருசிலரின் விளம்பரங்களுக்கு பழியாக வேண்டும்.ஏனெனில் உங்களை வைத்து தங்களின் தேவையை நிறைவு கொள்வதே இந்த கைக்கூழிகளின் திறமை.
நல்ல விடயங்களை எப்போதும் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் பின்நிற்க வேண்டாம்.ஏனெனில் எவர் எதைச் செய்தாலும் அதன் பயன் நமது மண்ணுக்குச் சொந்தமாக வேண்டும்.நாம் மிகப் பெறுமதிவாய்ந்த வாக்குகளை இவர்கள் மீது நம்பிக்கை வைத்து அதிகாரம் வழங்கியுள்ளோம்.இவர்கள் எமது சேவகர்கள்.மாறாக வாக்களித்து அடிமைகளாக வாழ்கிறோம்.
திருகோணமலை வீதி அபிவிருததி அதிகாரசபை மற்றும் சிலதிணைக்களங்களில் நமது பிரதேச அபிவிருத்தியில் நடக்கின்ற போட்டி மற்றும் ஊழல் தொடர்பில் 1000பக்க கதை உள்ளது.
உங்களுக்குள் அபிவிருத்தி என்ற வெளிப்பார்வையில் நடக்கின்ற பனிப்போர்,உங்கள் சொந்த உழைப்பை மையமாக வைத்ததே தவிர வேறு ஒன்றுமில்லை.
ஆகவே உங்களை மக்கள் நம்பிக்கை வைத்து தலைவர்களாக தெறிவு செய்துள்ளனர்.உங்கள் செயற்பாடுகளுக்கு கணக்கும் கேள்வியும் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
உங்கள் பதவிக்காலத்தில் அடுத்த தேர்தலுக்கு செலவு செய்வதற்காக பணத்தை தேடி அழைகிறீர்கள்.மேலும் சில பினாமிகளை கொந்தராத்துக்காரர்கள் என்ற பெயரில்உங்களுக்காக உருவாக்குகின்றீர்கள்.ஆகவே அரசியல் மொத்தமாக முதலீட்டு நிறுவனமாக மாறியுளளது.
ஆகவே நமது பிரதேசத்தில் எத்தனையோ பிரச்சனைகள் அவசியமாக தீர்க்கபறபட வேண்டிஉள்ளது.இதனை உங்களுக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்துக்குள் இயலுமானவரை நீங்களே செய்து முடிக்க வேண்டும்.முடியாவிட்டால் இயலுமானவர்களக்கு இடம் விட்டு விலகவேண்டும்.மாறாக அடம்பிடித்து மக்களை கோமாநிலையில் வைத்து நடாத்துகின்ற பலப்பரீட்சயில் நீங்களே நாளை பலியாகலாம்.
ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.இதற்கு முதற்கட்டமாக எதிர்வரும் காலங்களில் கட்சியின் அறிமுகம்,நோக்கம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்ட உள்ளோம்.
வேட்பாளர்கள் 3 தரவரிசையாக தெறிவு செய்யப்பட உள்ளனர்:
1)மத்திய கிழக்கில் இருக்கின்ற முற்போக்கான இளைஞர்கள்-30%
2)ஊரில் இருக்கின்ற படித்த,சமூக சிந்தனையுடையவர்கள்-30%
3)பலகட்சிகளில் அரசியல் செயற்பாட்டுடன் தொடர்பில் உள்ளவர்கள்-30%
4)பெண்கள்-10%
வேட்பாளராக முடியாதவர்கள்
1) ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள்
2) அரசியல்வாதிகளின் நேரடி உறவினர்கள்
3) குற்றச்சாட்டு மற்றும் சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர்கள்.
நமக்கான கட்சி
நமக்கான பாதை
நமக்குரிய கொள்கை
நாளைய பயணம்!
இது எமது கண்ணி முயற்சி.இதற்கான ஆலோசனைகள் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
Fahmy Mohideen
Tel:00447870763570
*திருமலை சகோதரத்துவ அமைப்பு.