மு.இராமச்சந்திரன்-
அட்டன் பிரதேத்தில மூன்று நாட்களுக்கு எரிபொருள் வினியோகம் செய்யமுடியுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை கொட்டகலை அட்டன் நோர்வூட் மஸ்கெலியா நகர பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வினியோகிக்கும் வகையில் பெற்றோல் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வினியோகம் தடையின்றி வினியோகம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.