குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்.





க.கிஷாந்தன்-

மஸ்கெலியா – குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு குடியிருப்பைச் சேர்ந்த 5 பேரை வேறு இடங்களுக்கு இடம்பெயருமாறு 15.10.2017 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடா மஸ்கெலியா பகுதியில் குறித்த வீட்டிற்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால், வீட்டிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதிலும் சேதமாகியுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா மவுசாகலை பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -