நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நேற்று (14.10.2017) ஏறாவூரில் இடம் பெற்றது.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் NFGGயின் ஏறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினர் MLM சுஹைல் ஆசிரியரின் தலைமையில் இக்கூட்டம் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை உரையினை MLM சுஹைல் அசிரியர் நிகழ்த்தியதோடு NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித் தவிசாளர் சிறாஜ் மசூர், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை ஆற்றினர். ஏறாவூர் பிரதேச NFGG செயற்குழு உறுப்பினரான சகோ.AM ஜமீல் உள்ளிட்ட பலரும் இப்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
இலங்கைக்கான புதிய யாப்புருவாக்க நடவடிக்கைகள், 20ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்தம் என்பவற்றின் உள்ளடக்கம் அதன் அரசியல் தாக்கங்கள். முஸ்லிம் பிரதி நிதிகள் நடந்து கொண்ட விதம், புதிய யாப்புருவாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை பாராளுமன்ற தேர்தல் திருத்தம், மாகாண சபைகளுக்கான அரசியல் பகிர்வு மற்றும் வட கிழக்கு இணைப்பு தொடபான விளக்கங்களும் இக்கூட்டத்தில் உரையாளர்களால் தெளிவு படுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி NFGG யின் பிரதேச செயற்குழு உறுப்பினர்களும் பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.