



மு.இராமச்சந்திரன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காமினிபுர பகுதியில் குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ள நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை என அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
14.10.2017 இரவு குறித்த குடியிருப்பின் பின் பகுதியிலுள்ள மண்மேடு சரிந்து வீழ்ந்தனால் குடியிருப்பு சேதடைந்துள்ளதுடன் வீட்டின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு சேதமான நிலையில் இது வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாற்று நடவடிக்கை பெற்றுகொடுக்கவில்லை. என்று குடியிருப்பின் உரிமையாளரினால் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
சேதமாகிய குடியிருப்பில் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் தொடந்தும் தங்கியுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் வாழ்ந்துவருதாகவும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.