சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக அன்வர்தீன் ஜனாதிபதியினால் நியமனம்

-
எம்.ஜே.எம்.சஜீத்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக ஏ.பீ.அன்வர்தீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், முன்னாள் ஜனாபதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,  சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க,  அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சுசில் பிரேமஜயந்த, பைசர் முஸ்தபா மற்றும் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர்தீன், சமூக சேவையில் மிக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -