அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது!!!




எம்.வை.அமீர்,எஸ்.எம்.எம்.றம்ஸான்-

டந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஐ.எம்.ஸாஹீர் என்பவருக்கு வைத்தியசாலையால் முறையான சிகிச்சை வழங்கப்படாதாதன் காரணமாகவே உயிரிழந்ததாக கூறி சம்பவ தினத்தில் கடமையில் இருந்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயிரிழந்தவரின் நண்பர்கள் என்று கூறும் பலரால் வைத்தியசாலை முன்பாக பாரிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சில மணிநேரங்கள் குறித்த பிரதேசத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை போலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே.ஜெயநித்தி மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.உப்புல் பியலால் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டபோதும் சற்று நேரம் முடியாமல் போனது.

பொலிசாரின் தொடரான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்,   வைத்திய அத்தியட்சகருடம் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டனர். அதனைத்தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மானுடன் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த மரணமானவருக்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதன்போது வைத்திய அத்தியட்சகரினால் குறித்த மரணம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை தரும் பட்சத்தில் அதுதொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

குறித்த உறுதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் கூறவேண்டும் என்று கோரப்பட்டதால் அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் வந்து உறுதியளித்தார். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -