அத்தனகல்ல பிரதேத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..
மகா நடிகர் ரன்ஞன் ராமனாயக்கவின் வேஷம் கலைந்துவிட்டது.மகா நடிகர் ரன்ஞன் ராமனாயக்க தனது பெயரில்இறக்குமதி செய்துள்ள தீர்வையற்ற சொகுசு வாகனத்தை மூன்று கோடியே எட்டு லட்சம் ரூபாவுக்கு விற்பனைசெய்துள்ளார்.
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பெருவதில்லை என கூறிக்கொண்டு தன்னை ஒரு ஹீரோவாக காட்டி வலம்வந்தநடிகர் ரஞ்சன் அவரது பெயரில் பி எம் டபில்யூ 730 3000 CC டீசல் கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
குறித்த கார் கடந்த வருடம் 9 ம் மாதம் ரஞ்சனின் பெயரில் அவருக்கு வழங்கப்பட்ட பேமிட் மூலம் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மறு தினமே அது மூன்று கோடியே எட்டு லட்சம் ரூபாவுக்கு விற்பனைசெய்துள்ளார்.
தனக்கு கிடைத்த பெர்மிட்டை விற்று தின்றுவிட்டு அடுத்தவர்களை விமர்சித்து திரிவது எவ்வளவு மோசமான செயல்என அவர் குறிப்பிட்டார்.
மேற்குலக சக்திகளே தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மியன்மாரில் ரோஹிங்கயர்களுக்குஎதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவரது ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ..
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி இலங்கையில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றங்களின்பின்னணியில் அமேரிக்கா பங்காற்றியது என ஆட்சி மாற்றத்தை அடிப்படையாக கொண்டுகூறியிருந்தார். இவர்களுக்கு இலங்கையின் விடயங்களில் தலையிட வேண்டிய என்ன தேவை உள்ளது. அமெரிக்காவானது ஒரு விடயத்தை சாதிக்க நினைத்துவிட்டால் அதற்கு எத்தனை பலிகளை கொடுக்கவும்தயங்காது.அந்த வகையில் தான் இலங்கையில் அனைத்தும் நடந்தேறியிருந்தன.
தற்போது மியன்மார் நாட்டில் அனைவரும் கண்டிக்கத் தக்க வகையிலான முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்புசம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.ராக்கைன் மாநிலமானது கடல் பிரதேசத்தை அண்டிய ஒருபகுதியாகும். இப் பகுதியில் அமேரிக்கா போன்ற நாடுகள் எண்ணை சுரங்க பாதை அமைப்பதற்கானமுயற்சிகளை மேற்கொள்வாதாக அறிய முடிகிறது.அதற்கு இப் பகுதிகளில் மக்கள் வாழ்வது தடையாகவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் தைரியம் அவ்வளவு இலகுவில் யாருக்கும் வந்துவிடாது. இதன் பின்னால் மிகப் பெரும் சக்திகளின் ஆதரவுகள் இருக்க வேண்டும். மியன்மாரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள் இஸ்ரேலின் ஆயுதங்கள் என இஸ்ரேலின் முன்னாள் பொலிஸ் ஆணையாளர் ஒருவர் கூறியிருந்தார்.இதுதெளிவான இராஜதந்திரமானது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துள்ளார்.இந்த விடயங்களேஇதன் பின்னால் உள்ள சர்வதேச சதிகளை இணங்காட்ட போதுமானதாகும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்ற போது முஸ்லிம்கள் எம்மை இயன்றளவுதூற்றினார்கள்.இதனை தான் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களும் எதிர்பார்த்தனர்.எனவே, முஸ்லிம்கள் தங்களுக்கு நடக்கின்ற அநியாயங்களின் உண்மை சூத்திரதாரிகளைஇணங்கண்டு, அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமெனகுறிப்பிடப்பட்டுள்ளது என அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.