அனா-
கிழக்கு முதலமைச்சர் அரசியல் பணியை பகுதிநேர தொழிலாக தெரிவித்தாலும் நான் இதனை மக்களுக்கு சேவை செய்யும் முழு நேர தொழிலாகவே கருதுகின்றேன் என புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்;.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பொருளாதாரமாக விவசாயம் மீன்பிடி காணப்படுகின்றது. அதில் விவசாயத்துறையில் இயற்கையாக பல அழிவுகளை சந்தித்து கொண்டிருக்கின்றோம். கால நிலை மாற்றம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகள் பாரிய இழப்பை விவசாயிகள் சந்தித்திருக்கின்றார்கள்.
இன்னும் சில காலங்களில் கிழக்கு முதலமைச்சரின் அதிகாரங்கள் போய் விடும். அவர் வெறும் மனிதராகத்தான் திகழ்வார். மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் அவர் செயற்படவில்லை.
நாங்கள் தோல்வியடைந்தாலும் அமைச்சருக்கு கொடுக்கின்ற அதே அந்தஸ்தை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள். நான் மூன்று தடவை தோற்றுள்ளேன், மூன்று தடவை வெற்றி பெற்றுள்ளேன். வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்கள் அன்பான இருப்பார்கள் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று செயற்படுவது அரசியலுக்கு சாத்தியமற்ற விடயம்.
கிழக்கு முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான் இதனை முழு நேர தொழிலாக செய்து வருகின்றேன் எனது தொழில் அரசியல்தான். நான் வேறு எவருடனும் போய் விடுதிகளில் இருப்பதுமில்லை. எனது முழு வாழ்க்கை அரசியல்தான். நான் இரவு பகலாக பத்தாயிரம் கிலோ மீற்றர் வாகனத்தில் ஓடிவதோ ஆட்கள் தேடி விடுதிகளில் தங்குவதோ கிடையாது.
பல்கலைக் கழகத்தினை ஒன்றரை வருடமாக கட்டி வருகின்றேன். அங்குள்ள கொள்கலனில் தான் எனது வாழ்க்கை ஒன்றரை வருடமாக நடாத்தி வருகின்றேன். நான் நினைத்தால் பாசிக்குடா உல்லாச விடுதியில் தங்க முடியும் எங்களுடைய தொழில் சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும். இரவு பகலாக சென்று சமூகத்திற்கு என்ன பிரச்சனைகள் காணப்படுகின்றது, என்ன தேவை, என்ன செய்ய வேண்டும் என்று தேடிப் பார்த்து செய்வதுதான் எங்களுடைய தொழில்.
கிழக்கு முதலமைச்சர் இரண்டு வருடம் வந்து போவாறு அவருக்கு இது பகுதி நேர தொழில் அது பிரச்சனையில்லை. ஆனால் எங்களுக்கு முழு நேர தொழிலாக மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களுடைய தலையாய கடமையாகும் என்றும் தெரிவித்தார்.