சாய்ந்தமருதால் எந்தவொரு பிரதேசமோ இனமோ கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது!

காரைதீவு சஹா-

சா
ய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதன் மூலம்
எந்தவொரு பிரதேசமோ இனமோ கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது!*

*சாயந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஊடகஅறிக்கை!*

*காரைதீவு நிருபர் சகா*

*சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதன் மூலம்
எந்தவொரு பிரதேசமோ இனமோ கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது.*

*இவ்வாறு கூறும் ஊடகஅறிக்கையினை சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜூம்ஆப்
பள்ளிவாசலின் நிருவாகத்தினர் நேற்று(22)திங்கட்கிழமை இரவு 7மணிக்கு
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிருவாகசபைக் கட்டடத்தில் நடாத்திய
ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து இவ்வூடக அறிக்கையினை வெளியிட்டனர்.*

*நிருவாகசபைத்தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது.*
*அங்கு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:*


*வரலாற்றுத் தவறொன்றின் மூலம் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் விருப்பு
வெறுப்புக்கு அப்பால் இணைத்து கல்முனை மாநகரசபை உருவாக்கப்பட்டு ஒட்டு
மொத்தமாக முழுகல்முனை தொகுதியையும் ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளது அது போன்று
மற்றுமொரு வரலாற்றுத் தவறொன்றை ஏற்படுத்தாமல் சாய்ந்தமருது பிரதேச
செயலகத்திற்கு மட்டும் வரையறை செய்து ஒரு சபையை ஏற்படுத்த இருப்பது தாங்கள்
அறிந்ததே.*


*இதற்குமாறாக ஒருசிலர் கடந்த காலங்களில் முன்னாள் உள்ளுராட்சி மாகாணசபைகள்
அமைச்சரால நான்கு சபைகளாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை
முறியடித்து இன்று அதனைதாருங்கள் என்று கேட்பவர்கள் இச்சபையானது பல்வேறு
நன்மைகளை சமூகரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஏற்படுத்தினாலும் கல்முனையின்
வீழ்ச்சிக்கு அடிகோலும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் விதைக்க
முற்படுகின்றனர்.*

* மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் உட்பட சகல
முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் சாய்ந்தமருது பிரதேச மக்களின் கோரிக்கையான
பிரதேச செயலகம் பிரதேச சபை என்பவற்றை பெற்றுக்கொடுக்க பின்னிற்கவில்லை.
குறிப்பாக பிரதேச செயலகத்தை உருவாக்கியபோது சாய்ந்தமருதின் வடக்கு எல்லை
குறைக்கப்பட்டது இந்த குறைக்கப்பட்ட எல்லையோடுதான் பிரதேச செயலகத்தின் எல்லை
வரையறுக்கப்பட்டது. இதன் போது நாங்கள் கொதித்தெழவில்லை எமது பெருந்தன்மையான
விட்டுக்கொடுப்புக்கு சிறந்த உதாரணமாகும்.*


*எமது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதன் மூலம்
எந்தவொரு பிரதேசமோ இனமோ குறிப்பாக கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது என்று
உறுதியாகவும்அறிவு பூர்வமாகவும் அறிந்திருந்தும் கூட இவர்கள் இவற்றைத்
திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான
முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வது இவ்வூரின் ஒவ்வொரு குடிமகனுக்கும்
அதிருப்தியையும் ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.*

*எமது சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் மரைக்காயர் சபை சாய்ந்தமருது
பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைக்குரிய முறையான விண்ணப்பத்தை
இந்தப்பிரதேசத்தில் பெரும்பான வாக்குப்பலத்தைப் பெற்ற கட்சியின் தலைவர் ஊடாக
எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் மாநகர சபையின் உறுப்பினர்கள் கல்முனை மாநகர
சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள்
அமைச்சராகவிருந்த தற்போதைய சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவிடம் கையளித்தது .*

*மட்டுமல்லாது அதற்கான பிரதேச மாவட்ட செயலாளரின் சிபாரிசுகளையும் பெற்றுக்
கொடுக்கப்பட்டது. அத்துடன் எமது முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய அரச
வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தீர்மானமாக
எடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.*


*இவையெல்லாவற்றுக்கும் மேலாக கடந்த பொதுத்தேர்தலின்போது ஸ்ரீ.ல.மு.கா இன்
தலைவர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் கல்முனையில்
நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் இந்த சாய்ந்தமருதுக்கான தனியான
உள்ளுராட்சி சபையை தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. *

*மேலும் அ.இ.ம.கா கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் தற்போதைய
மாகாண உள்ளுராட்சி அமைச்சரை விசேடமாக அழைத்து வரப்பட்டு சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.*

* மட்டுமல்லாமல் பிரகடனமும் செய்யப்பட உள்ள இவ்வாறன நிலையில் சுமார் 30000
மக்களை கொண்டதும் 20000 க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டதுமான ஒரு
பிரதேசத்திற்கான சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய ஒரு தனியான
உள்ளுராட்சி வழங்கப்படவுள்ள இச் சந்தர்ப்பத்தில் குறுகிய நோக்கங்களுடன் தடுக்க
முனைவது அல்லது அதற்கான முட்டுக்கட்டை போட நினைப்பது இப்பிரதேச மக்களின்
அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற செயற்பாடவே கருத
முடியும்.*

*எனவே இவ்வாறன எதிர் செயற்பாட்டார்கள் உடனடியாக தங்களை திருத்திக் கொண்டு
யதார்த்தத்தின் பக்கம் திரும்புவது சிறந்தது. ஆதனால் பின் விளைவுகளையும்
தாக்கங்களையும் ஒரு கணம் சிந்தித்து இவ்வூர் மக்களின் அபிலாசைகள் விருப்பு
வெறுப்புகளுக்கு மதிப்பளித்து எதிர்வரும் காலங்களில் மலரவிருக்கின்ற இவ்
உள்ளுராட்சி சபையை மலர ஒன்றிணைவோம்.*
*எமது நோக்கம் கல்முனையின் அபிவிருத்தி சாய்ந்தமருதின் அபிவிருத்தி ஒட்டு
மொத்த கல்முனை தொகுதியின் அபிவிருத்தி மற்றும் பிரதேச ஓற்றுமையுமே.*

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -