சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தொடர்பில் விழிப்புடன் இருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் - UK நாபீர் குற்றச்சாட்டு.




ஹஸ்பர்-

தேவை வரும்போது மட்டும் அம்பாறை மாவட்ட மக்களின் ஞாபகம் வரும் அரசியல்வாதிகள் தற்போது பெருந்தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களை வைத்து அரசியல் செய்யும் நோக்கோடு அம்பாறை மாவட்டத்தின்‌ பல பகுதிகளுக்கும் வந்து அலைந்து திரிவதை காண முடிகின்றதாகவும் பெருந்தலைவரை வைத்து அரசியல் செய்ய அம்பாரை வந்துள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இனம்கண்டுகொள்ளுமாறும் நாபீர் பௌன்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் Eng. UK நாபீர் இன்று (3) அவருடைய ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் அதிகாரம் நிறைந்திருக்கும் போது பெரும் தலைவரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள் தற்போது தங்களது வாக்கு தேவைக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று புகழ்பாடுகின்றனர்.
அது மாத்திரம் அல்லாமல் தான் அதிகாரத்துக்கு வந்ததும் தொழில் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடும் நிலை தேர்தல் வருகின்ற காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

தேர்தல்கள் வருகின்ற போது மக்களது உணர்வுகளை தூண்டிவிட்டு தங்களது பதவிகளையும் பட்டங்களையும் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற ஒரே நோக்கோடு மட்டும் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தங்களது இலக்கினை அடைந்த பிறகு இளைஞர்களின் எதிர்பார்ப்பு உதாசீனம் செய்யப்படுகின்ற நிலைகள் காலம் காலமாக அரங்கேறி வருகின்றமையை தொடர்ச்சியாக காணலாம்.

இவர்கள் அம்பாரை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் காணப்படும் வறுமையை பயன்படுத்தி அந்த மக்களுக்கு அரிசும் ஆடைகளும் பணமும் லஞ்சமாக கொடுத்து வாக்குகளை பெற்றுக் கொண்டு சமூகத்தை ஏமாற்றி பணத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் ஆளுமை அற்றவர்கள் பாராளுமன்றம் செல்லுகின்றார்கள் அவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு தகுதி பணம் மட்டுமே இதேவேளை இவர்களுக்கு பக்க வாத்தியமாக ஒரு சில மார்க்க வாதிகளும், ஒரு சில பள்ளிவாசல் தலைவருகளும், கல்விமான்களும், புத்திஜீவிகளும், ஜால்ரா அடித்துக் கொண்டு அவர்களும் சுகபோகமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு சந்தர்ப்பத்திற்கு மட்டும் இங்கு வந்து அரசியல் செய்து மக்களின் வாக்குகளை பெற்ற பின் அம்பரை மாவட்டத்தை மறந்து செயல்படுகின்ற அரசியல்வாதிகள் தொடர்பில் விழிப்புடன் இருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :