தெற்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உதவிக் கரம் நீட்டுகின்றது கிழக்கு மாகாணம்.

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடந்த ஜூன் மாதம் மாகாணசபையில் அவசர தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தார்.

இதற்கமைவாக நாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில் வௌ்ளத்தால்பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை உடையவர்களுக்கான கட்டடப் பொருட்கள்கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

இதனடிப்படையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட 9 மில்லியன்ரூபா செலவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

நாளைய தினம் காலை 10 மணியளவில் தெனியாய பிட்டபெத்தர பிரதேச செயலகம் மற்றும் தெனியாயகொட்டபொல பிரதேச செயலகம் ஆகியவற்றில் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்துகட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயர் மட்ட அரச அதிகாரிகளும்இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -