எம்.ரீ. ஹைதர் அலி-
மக்கள் பயன்பெறும் வகையில் தனது சொந்த நிதியில் மா அரைக்கும் இயந்திரத்தினை பெற்றுக்கொடுத்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் மா அரைக்கும் இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதனூடாக இப்பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் ஏனைய இடங்களை விட மிகக் குறைந்த விலையில் மா அரைக்க முடிவதோடு குறித்த மா அரைக்கும் இயந்திரத்தினால் பெறப்படும் வருமானம் இயந்திர பராமரிப்பு மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.
வறிய குடுப்பத்தினைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார்த்தினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு செயற்திட்டங்களில் இதுவும் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டமானது சுயதொழில் ஊக்குவிப்பிற்கான முன்னுதாரணமான ஒரு வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.