திருகோணமலை மாவட்டத்தில் விபத்து ஒருவர் மரணம்- 05 பேர் காயம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பட்டித்திடல் பகுதியில் முற்சக்கர வண்டியுடன் லொறி மோதியதில் முற்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் மல்லிகைத்தீவு-பெரியவெளி பகுதியைச்சேர்ந்த தியாகராஜா சிவசுப்ரமணியம் (76வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-மல்லிகைதீவிலிருந்து பாலத்தோப்பூருக்கு சமுர்த்தியினால் வழங்கப்படுகின்ற முதியவர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.தவறாஷா (28வயது) ஆனந்தம் மின்னொளி தேவி (47வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் முற்சக்கர வண்டிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த எஸ்.சத்தியவதி (64வயது) எஸ்.அருட்செல்வம் (37வயது) மற்றும் டி.சுபாசினி (16வயது) ஆகிய
மூவரும் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -