கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் சுமித் எதிரிசிங்க அவர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேரில் சென்று சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்,
இதன் போது கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க பல்வேறு பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கு கிழக்கு முதலமைச்சர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்,
ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க அவர்கள் 1978ஆம் ஆண்டு உபசேவைஉபபொலிஸ் பரிசோதகராக பொலிஸ் துறையில் இணைந்து பல பதவி உயர்வுகளைப் பெற்று தனது 39 வருடசேவையின் பின் நாளைய தினத்தோடு 60 வயதை பூர்த்தி செய்பவராக ஓய்பெற்றுச் செல்லுகின்றார்.