சப்னி அஹமட்-
அரசியல் வாதியாகவும், சட்ட தரணியாகவும், தூதுவராகவும்செயற்பட்டு தனது சமூக உணர்வை மிகவும் மதிப்புக்குறியதாக வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் மறைவு முழு முஸ்லிம் சமூகத்திற்கும், அரசியல் கலாச்சாரத்திற்கும், அம்பாறை மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது அனுதாப செய்தியில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தனது அனுதாப செய்தியில் தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவருடன் தனது அரசியல் பயனத்தை மேற்கொண்டு சமூகப் பற்றுடன் தனது அரசியல் செயற்பாட்டை நன் மதிப்புடன் மேற்கொண்டு வந்த முன்னாள் அமைச்சரின் சேவையை பெரும் மதிப்புக்குள்ளாகும். இச்சேவையை எம்மால் மறக்கவோ மறுக்கோ முடியாத நிலையில் உள்ளோம். அது போல் தனது அரசியல் பயனத்தினை மிகவும் நன் மதிப்புடன் முண்ணுதாரண மனிதனாக செயற்பட்டிருந்தார்.
தனக்கென வழங்கப்பட்ட அமைச்சினை மிகவும் சிறந்த முறையில் தன் மக்களுக்காகவும் தன் பிராந்திய மக்களுக்காக அதிக உழைப்புடன் செயற்பட்டு அமைச்சினையும் தனக்கு வழங்கப்பட்ட பதவிகளையும் நேசத்துடன் மேற்கொண்டு செயற்படு வந்துதும் பெரும் மதிப்புக்குறிய சேவையாகும் .
இந்நாட்டு மக்களாலும் கல்முனை தொகுதி மக்களினாலும் அதிகம் மதிப்புக்குறியவறாக செயற்பட்டதுடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களினால் அதிகம் நேசிக்கப்பட்ட ஓர் மாமனிதராகவும் செயற்பட்டு வந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேரியக்குத்துடன் இணைந்து தனது அரசியல் பயனத்தினை மேற்கொண்டு சமூகத்திற்காக குரலாக மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடனும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து தனது அரசியலை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமூக உணர்வுடன் செயற்பட்டு வந்ததும் பெரும் தியாகமாக கருத வேண்டியுள்ளதுடன் அவரின் மகான ரஹ்மத் மன்சூர் அவர்களை சமூக உணர்வுக்காக தன் மகனையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக்குள் உள்வாங்கி தனது மகனையும் சமூக சேவைக்காகவே அர்ப்பனித்தவராவார்.
ஆகவே, அன்னாரின் இழப்பு சமூகத்திற்கு பாரிய இழப்பாக கருதுகின்றேன். அன்னாரின் சேவையை இறைவன் பொருந்திக்கொண்டு அன்னாருக்காக இறைவன் ஜன்னதுல் பிர்தொளஸ் எனும் சுவர்க்கம் நுழைய அல்லாஹ் அருள் புரிவானாக.