MPCS வீதிக்கான குடிநீர் இணைப்புக்கான வேலைகள் ஆரம்பம்..!

ஹைதர் அலி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டிலிருந்து கல்குடாத் தொகுதி மக்களின் நீண்ட காலத் தேவையான சுத்தமான குடிநீரின் தேவையைப் பூர்த்து செய்து கொடுக்கும் அடுத்த கட்டமாக MPCS வீதிக்கான குடிநீர் இணைப்புக்கான வேலைகள் 2017.03.30ஆந்திகதி-வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் செயலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி மத்திய குழுவின் செயலாளர். எம்.எம். பஸீர் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -