ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையில் நடைபெற்றுவரும் 3வது நாள் யோவன்புர நிகழ்விற்கு பிரதமமந்திரி ரணில் விக்கிரம சிங்க நேற்று மாலை 3.45 மணியளவில் வருகைதந்தார். வருகைதந்த அவர் யோவன்புர இளைஞர்முகாம்களுக்கும் விஜயம் செய்து பல்வேறு மாவட்ட இளைஞர் யுவதிகளையும் நேரடியாககண்டு கலந்துரையாடினார்.
இதற்கு முன்னர் விஷேட மண்டபத்தில்இளைஞர்கள் மத்தியில் வைப ரீதியாக கலந்துரையாடியதுடன் உரையாற்றினார். இங்கு இராஜங்க அமைச்சர் நிரோசன்பெரேரா,பாராளுமன்ற உறுப்பினர் களான எம்.எஸ்.தௌபீக், காவிந்த ஜெயவர்தன மற்றும் இம்ரான் மரூப் என பலரும் கலந்துகொண்டனர்.