மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91 92 அணியினரின் ஐந்தாவது ஒன்று கூடல் கடந்த சனி(28) ஞாயிறு(29) தினங்களில் திருமலையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த ஒன்று கூடலிலும் சுற்றுலாவிலும் கலந்து கொண்டார்கள் .
திருகோணமலை கிரிஜா இல்லத்தில் ஐந்தாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அனைவரும் தனது கருத்துக்களை தெரிவித்து அடுத்த பயணம் மலையகத்திற்கு அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தார்கள்.
இந்த ஒன்று கூடல் மற்றும் சுற்றுலாவிற்கு புலன நண்பிகளான ஜெர்மனியில் இருந்து விஜயகலா ,லண்டனில் இருந்து ராஜமாலினி ஆகியோரின் அனுசரணையும் கிடைக்கப்பெற்றது.
இதன் போது திருகோணமலை கோணேசர் ஆலயம், பத்திரகாளியம்மன் ஆலயம், லட்சுமி நாராயணன் ஆலயம், மற்றும் கன்னியா வெந்நீரூற்று ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்தார்கள்.
திருகோணமலை புலன உறவுகளான சசிகலா இந்திராணி நளினி கிரிஜா மகாலட்சுமி குமுதினி மற்றும் சண்முகநாயகம் ஆகியோர் இதற்கான விரிவான ஏற்பாடுகளையும் பயணத்தின் போதான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment