கிண்ணியா தளவைத்தியசாலைக்கு இன்று(01) ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விஜயம் செய்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுவருதையும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலையும் மேற்கொண்டார் ஜனாதிபதி.
இதன்போது ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளும் தரமுயர்வு தொடர்பான விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டன.
இதன் பின்பு ஜனாதிபதி திருகோணமலையில் நடைபெற்றுவரும் யொவுன்புரய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.