டெங்கு பரவலைகட்டுப்படுத்த பயன்பட்ட ”நிலவேம்பு குடிநிர்” விநியோக திட்டம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

ந்தியாவில் டெங்கு பரவலைகட்டுப்படுத்த பயன்பட்ட ”நிலவேம்பு குடிநிர்” விநியோக திட்டம் திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நாளைக்காலை 9.30மணிக்கு நிலவெளி லக்ஷ்மிநாராயணர் ஆலயமுன்றலில் வைத்து இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்தமருத்துவப்பிரிவும் திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச்சங்கமும் ஆலய நிர்வாகமும் இணைந்து இக்குடிநீர் வழங்கலைசெய்ய உள்ளன.

இதில் அயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொண்டு பயன்பெறுமாறு எற்பாட்டுக்குளவினர் கோரிக்கை விடுத்தள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை குளு மேற்கொண்டுள்ளது.

தமிழ் நாட்டில் டெங்கு பரவிய காலத்தில் இக்குடிநீர் மிகவும் பிரபல்யமாக பயன்படுத்தப்பட்டது.

இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இதனைப் பருகுவதன் மூலம் ஆறு மாத காலத்திற்கு டெங்கு தொற்று கட்டுப்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.முற்றிலும் இலவசமாக சேவை நோக்கில் இத்திட்டம்செயற்படுத்தப்படவுள்ளன.எனவே அதிகளவிலான மக்கள் பயன்பெறுமாறு கொரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -