திருகோணமலையில் உணவககங்கள் சோதனை..!

எப்.முபாரக்-
திர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் ரெஸ்டோரண்டுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாக கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரி டி.டபிள்யூ.திஸாநாயக்க தெரிவித்தார்.

அடுத்த ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார். புத்தாண்டு காலப்பகுதியில் தரமானதும் சுகாதாரமானதுமான உணவு வகைகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக உணவுப் பொருட்களஞ்சியங்கள் மொத்த வர்த்தக நிலையங்கள் குறிப்பாக நகரப்புரங்களின் உள்ள கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

மேலும் எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு மே 02ம் திகதி தொடக்கம் உணவுப் பாதுகாப்பு வாரமொன்றும் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். இதன் போது அசுத்தமான செயற்பாடுகளை மேற்கொண்டு வர்த்தக நிலையங்களை வைத்திருப்போருக்கெதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -