நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்தின்-
கொழும்பு அட்டன் பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இடம்பெற்ற வாகண விபத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வட்டவளையிலிருந்து அட்டன் நோக்கி வந்த சிரிய ரக லொறியே 03.03.2017 காலை 9.30 மணியளவில் குயில்வத்தை பகுதியில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தில் காயமுற்ற சரதியும் மற்றொருவரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
அதிக வேகமாக எதிரே வந்த வாகணத்திற்கு இடம்கொடுக்க முற்றப்பட்ட போதே விபத்து சம்பவித்துள்ளதாகவும் மேலதி க விசாரணை தொடர்வதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


