கல்முனை ஸாஹிரா கல்லூரியில் இளம் புத்தாக்குனர் கழகம் கடந்த வியாளன் ( 2 ) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.




எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ல்லூரியின் உயர்தர தொழில்நுட்ப பீட பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படிநிகழ்வில், கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், பிரதி அதிபர் ஏ.பி.முஜீன், உதவி அதிபர்களான எம்.எஸ்.அலிகான், எம்.எச்.எம்.அபுபக்கர், எம்.எம்.எம்.நிஸார்தீன், சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட இளம்புத்தக்குனர்களும் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரியின் பல தரப்பட்ட வகுப்புகளைச் சேரந்த சுமார் 250 மாணவர்கள் இக்கழகத்தில் அங்கத்துவத்தைப்பெற்றுக் கொண்டனர்.

மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் இதுவரை பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட இக்கல்லூரி மாணவர்கள்அண்மையில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் இளம் புத்தாக்குனர் கழகத்தில் ஏ.எம்.எம்.சவ்பாத் தலைவராகவும், எம்.ரீ.எம்.ஆஸிப் உப தலைவராகவும், ஜே.எம்.சஹ்தி செயலாளராகவும், எஸ்.எம்.அஜாத் உப செயலாளராகவும்தெரிவு செய்யப்பட்டனர்.

இதே வேளை இக்கல்லூரி மாணவர்களான சமூன் முஹம்மட் அஜாத் மற்றும் ஏ.எம்.எம்.சவ்பாத் ஆகியோர் இலங்கைபுத்தாக்குனர் ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ” “Innova Minds 2017 “ அதி விசேட புத்தாக்கத்தின்உட்பிரவேசம் நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் அனுசரணையுன் கொழும்பு இலங்கை தேசியபொறியியலாளர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் இரண்டு நாள் பயிற்சி நெறிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்து இந்த இரு மாணவர்களுமே தெரிவு செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்க விடயமாகும்.

தேசிய ரீதியில் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 21 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -