கிண்ணியாவில் டெங்கு நோய் தீவிரமாக பரவுவதையிட்டு இதற்கான ஆளணிகள் பற்றாக்குறை நிலவுகிறது இதனை கிண்ணியாவில் இருந்து கட்டுப்படுத்த இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும் என நேற்று (02) இரவு 9.00 மணியளவில் கிண்ணியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார் .
தற்போது கிண்ணியாவில் ஆரம்ப டெங்கு மரணம் காக்காமுனைப்பகுதியில் இளைஞர் ஒருவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து அது இன்று வரைக்கும் நான்காக அதிகரித்துள்ளது கிண்ணியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 400 யும் தாண்டியுள்ளது இதற்காக இளைஞர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தொண்டர்களாக பொது சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர் அத்துடன் முப்படைகளின் உதவியும் தேவைப்படுவதாக வைத்தியர் ஏ.எம்.எம்.அஜித் தெரிவித்தார் தற்போது கிண்ணியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறையால் வெளியில் இருந்து வைத்தியர்களும் பொதுசுகாதார பரிசோதகர்களும் வரவழைக்கப்படவுள்ளனர்.
மேலும் இன்றில் இருந்து மூன்று நாட்களுக்குள் கிண்ணியாவில் உள்ள அனைத்துப் பாடசாலை சூழலும் உட்சுத்தம் வெளிச்சுத்தம் செய்யப்பட வேட்டுமெனவும் இல்லையெனில் அதிபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
