ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உஷ்தாத் ஹைருல் பஷர் நளீமியின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அதேவேளை, ஆளுமை மிக்க சிறந்த ஆசானை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதலாவது தொகுதி பட்டதாரியாக வெளியேறி, அங்கு சிரேஷ்ட விரிவுரையாளராகவும், உதவிப் பணிப்பாளராகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த உஷ்தாத் ஹைருல் பஷர் நளீமியின் ஜனாசா செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன். மாணவர்களது அன்iபை பெற்ற சிறந்த ஆசனாகவும், வழிகாட்டியாகவும், ஆளுமை மிக்க நிர்வாகியாகவும், நல்ல மனிதராகவும் சமூகத்தால் இணங்காணப்பட்ட இவர் ஜாமியா நளீமியா ஊடாக சமூகத்துக்கு அரும்பெரும் சேவையாற்றிய மாமனிதர்.
அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரிடம் கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்- எனக்குறிப்பிட்டுள்ளார்.