அவர் இது தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் பெறுபேறுகளில் சித்தியடைந்துள்ள சகல மாணவர்களுக்கும் அவர்களை சிறந்த முறையில் வழிகாட்டிய ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமைக்கு மத்தியிலும், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பல மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கல்வி எனும் ஆயுதத்தை பயன்படுத்தியே எதிர்கால சவால்களை நாங்கள் முறியடிக்க வேண்டும். உயர் கல்வியை தொடர்வதற்கு போதுமான பெறுபேறுகளைப் பெறாத மாணவர்கள் சோர்வடைந்து தமது கல்வியை இடைநிறுத்திவிடக் கூடாது. முயற்சியை கைவிடாது மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். அரச, தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - என குறிப்பிடப்பட்டுள்ளது.