பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை தம்பாளை தஃவா நலன்புரி அமைப்பின் அனுசரணையுடன் முக்கியஸ்தர்களுக்கான ஒருநாள் இஸ்லாமிய கருத்தரங்கொன்றினை நேற்று 25.03.2017 ம் திகதி தம்பாளை தஃவா நலன்புரி அமைப்பின் ஸ்தாபாகர் ஏ.எஸ். அஸ்மி (யூஸூபி) அவர்களின் தலைமையில் பொலன்னறுவை நியூ ரமதா ஹோட்டலில் நடாத்தியது.
காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற இந்த கருத்தரங்கிள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிக்கு வருகை தந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றதற்காக நிகழ்வின் இறுதியில் குலுக்கள் முறையில் மூன்று பேர் தெரிவு செய்யாப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கு புனித உம்ரா கடமையினை மேற் கொள்வத்க்கு இலவச விமானச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு வளவாளர்களாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம். முபாரக் மதனி, கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி மஜீதி, தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.