திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண தொண்டராசியர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசத்த்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல வருடகாலமாக இழுபறி நிலையில் உள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது கிழக்குமாகாணத்தில் 445தொண்டர் ஆசிரியர்களை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் முடிவில் பல வருடகாலமாக தீர்வு காணப்படாமல் காணப்பட்ட தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுத்த கல்வி அமைசர் கௌரவ அகிலவிராஜ் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபுக்கு தொண்டராசிரியர் சங்கத்தினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.
