எம்.எஸ்.எம்.ஸாகிர்-
இம்முறை SLAS ஆட்சேர்ப்பில் திறந்த அடிப்படையில் (OPEN) 175பரீட்சார்த்திகளும் மட்டுப்படுத்தப்பட்ட (Limited) அடிப்படையில் 46பரீட்சார்த்திகளும் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். இவ் எண்ணிக்கை SLASஆட்சேர்ப்பு வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
மேலும் இம்முறை வினாத்தாள்கள் மிகவும் கட்டமைக்கப்பட்டதாக அமைவதுடன், விடைத்தாள் மதிப்பீடானது இரு அரச கரும மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டு செய்யப்படவிருக்கின்றது. இது எதுவித பாகுபாடுமின்றி நடுநிலையான பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலாகும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனால் அதிகமான தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகள் கடந்த வருடத்ததைப் போலவே இவ்வருடமும் தெரிவாகுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வருட SLAS ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்2017பெப்ரவரி 17ம் திகதியன்று வெளியாகியது.
இதன்படி விண்ணப்பிக்கவேண்டிய இறுதித் திகதி 2017 மார்ச் 20ம் திகதி ஆகும்.குறித்த இத்தினத்தில் திறந்த போட்டிப்பரீட்சைக்காக விண்ணப்பிப்பவர்கள் 22 தொடக்கம் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டியதுடன் பல்கலைக்கழக பட்டமொன்றினை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்காக விண்ணப்பிப்பவர்கள் 53வயதிற்கு மேற்படாமல் இருப்பதுடன் பின்வரும் இரு தகமைகளில் ஏதாவதொன்றை பூர்த்திசெய்திருத்தல் போதுமானது.
1. பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெற்றிருப்பதுடன் அரச சேவையில் 5வருட அனுபவத்தினை பெற்றிருத்தல்.
2. பட்டமொன்றை பூர்த்தி செய்யாதவர்கள் அரச சேவையில் 10 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்திருத்தல்.
எனவே மேற் கூறப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்துள்ள அனைவரும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இப்பரீட்சை மே மாதத்தில் அல்லது ஜூன் மாதத்தில் இடம்பெறவிருப்பதால் பரீட்சைக்காக தம்மை தயார்படுத்திக்கொள்வதற்கான குறுகிய கால எல்லை யொன்று வழங்கப்படுகின்றது.
இக்காலத்தை வீணடிக்காது முழுமையான முயற்சியிலீடுபடுவதுடன் உயர் பதவிகளில் தமிழ் பேசும் அதிகாரிகளின் சேவை எம் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு காரணியாக அமைகிறது எனும் விடயத்தையும் உணர்ந்து எம் சமூக எழுச்சிக்கான பங்களிப்பையும் உங்களால் வழங்க முடியும்.
றிஸ்வான் சலாஹுதீன் (SLAS)
இலங்கை நிர்வாக சேவை.