கட்டாரிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் கடமை புரியும் அஷ்ஷெய்க் ரஷீத். எம்.பியாஸ் (நளீமி)யின் மாமியார் (மனைவியின் தாயார்) திஹாரியைச் சேர்ந்த சித்தி ஹபீலா சதகத் 22ம் திகதி; திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் கட்டாரில் காலமானார.
அன்னாரின் ஜனாஸா நேற்றிரவு கட்டார் அபூஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கட்டார் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஏ.சீ.லியனகே மற்றும் தூதரகத்தில் கடமை புரியும் உயரதிகாரிகள், ஊழியர்கள், கட்டாரில் கடமை புரியும் இலங்கையைச்சேர்ந்த நண்பர்கள் ஜாமியா நளீமியா கலாபீட சகோதரர்கள் உட்பட பெருந்திரளானோர் இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.