1. பெரிய கட்சி அல்லது செல்வாக்கான கட்சி
2. வெற்றி பெறும் கட்சி
3. ஆளத்தகுந்த கட்சி
4. அதிருப்தியான கட்சி
5. சிறிய கட்சி அல்லது வெற்றி பெற முடியாத கட்சி
6. தங்களை கவனிக்கும் கட்சி
மேற்கண்ட அம்சங்கள் ஊடுருவி இருப்பதன் மூலம் பணம் மற்றும் படை பலத்தைக்கொண்ட கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதில் அதிகம் முனைப்பு காட்டுகின்றன. தங்களின் இலட்சியத்தில் அப்படியே வெற்றியும் பெறுகின்றன. மேலும் ஆளுங்கட்சி மிதமிஞ்சிய சர்வாதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், அயோக்கியத்தனம், மோசமான ஆட்சி முறை இவற்றோடு இயங்கும் போது அந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகி அதுவே ஆளுங்கட்சிக்கு எதிரான சீரான அதிருப்தி அலையை தோற்றுவிக்கின்றன. (Anti Incumbency factor)தொடர்ச்சியில் ஆளுங்கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்திக்கிறது.. இவை இல்லாத தருணங்களில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது.
பெரும்பாலான வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் முடிவெடுக்கின்றனர். முந்தைய காலத்தில் தங்களை யார் வாக்குசாவடிக்கு காரில் அழைத்து செல்கிறார்களோ அல்லது கவனிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கும் முறை இருந்தது. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் Inducement என்னும் பணம். அரசியல் வாதிகள் தங்களது பணத்தை வீசி எறிந்து பகட்டான முறையில் மக்களை ஏமாற்றி, குறுகிய காலத்துக்குள் சொந்தம் கொண்டாடி பணம் கொடுத்தும் ஓட்டு வாங்கும் தற்போதைய நிலை. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை தேர்தலில் பணம் ஓட்டுகளை தீர்மானிக்கும் ஒரு கருவியாக மாறி போய் இருக்கிறது. இது இன்னும் நீட்சியடைந்து சாதாரண சூழலில் பணம் அதிகம் செலவழிக்கும் வேட்பாளரே வெற்றி பெறும் நிலைமை உருவாகி இருக்கிறது. மேலும் எங்களுக்கு வாக்களிக்க இவ்வளவு தொகை வேண்டும் என்று மக்கள் உரிமையோடு கேட்கும் நிலையும் உருவாகி இருக்கிறது. இது இலங்கை தேர்தல் அரசியலை பொறுத்தவரை மிகப்பெரும் அவலம்.
இங்கு கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் உண்மையான சேவை மனப் பான்மையும் , ஆளுமைத் திறனும் கொண்ட பண பலம் அற்ற திறமை சாலிகள் புறக் கணிக்கப் படுவதுதான் . பணத்தின் பின்னால் வட்டமிடும் வாக்காளர்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் பல பின் அடைவுகளை அடைவது இதனால் தான்.
அரசாங்கத்திடம் இருந்து உரிமைகளையும் , மற்றும் அவி விருத்திகளையும் பெற்றுக் கொடுப்பதுதான் உண்மையான அரசியல் வாதி என்பதையும் மக்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பதவிகளை குறிவைத்து பணத்தை செலவு செய்து அரசியல் களத்தில் குதிப்போர் மீது மக்கள் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா மக்களை கேட்டுக் கொண்டார்