காருக்குள்ளேயே ஆரம்பம் : நீதிமன்றில் வாவனா வாக்குமூலம்

டிகை பாவனா பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி திருச்சூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கொச்சி, பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டேன். காரை சாரதி மார்ட்டின் ஓட்டிவந்தார். இரவு 8.30 மணியளவில் நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே ஒரு வேன் வேகமாக வந்து எங்கள் கார் மீது மோதியது.

இதனால் சாரதி மார்ட்டின் உடனே காரை நிறுத்தினார். பின் இரண்டு பேர் அத்துமீறி என் காருக்குள் நுழைந்து என் செல்போனை பிடுங்கிகொண்டு என் வாயை மூடிவிட்டு, சத்தம் போடக்கூடாது என மிரட்டினர். களம்பச்சேரி அருகே காரில் இருந்து திடீரென ஒருவர் இறங்கிக் கொண்டார்.

பின் அடுத்து கருப்பு டீசர்ட் போட்ட வேறு ஒருவர் வந்தார். எனக்கு அவர்கள் பாலியல் தொல்லைகள் கொடுக்க தொடங்கினர். பாலாரி வட்டம் அருகே இன்னும் இரண்டு பேர் காருக்குள் ஏறினர்.

பின் அங்கிருந்த கேட் போட்ட வீட்டின் அருகே காரை கொண்டு சென்றனர். வீட்டிலிருந்து ஒருவர் கர்சீப்பால் பாதி முகத்தை மூடியபடி வந்தார். அவர் என் காரை ஓட்டினார்.

அப்போது அவர் நடித்து வரும் படத்துக்கு ஒழுங்காக ஒத்துழைக்கவேண்டும் என மிரட்டியபோது கர்சீப் அவிழ்ந்தது. அப்போது தான் அது பல்சர் சுனில் என தெரிந்தது.

மேலும் அவர்கள் முக்கியமான ஒருவரின் உத்தரவால் தான் வந்துள்ளோம். நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய தயங்கமாட்டோம் என கூறினார்கள், பின் அவர்கள் எல்லோரும் என்னை இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் என வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

விசாரணையின் போது காருக்குள் சில தடயங்கள் கிடைத்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -