றபீக் சர்றாஜ்-
இதுவரை காலமும் மூதூர் மீன் மார்கெட் பல சவால்களுக்கு மத்தியில் மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தாலும் இதனை கொள்வனவு செய்வதற்காக வருபவர்கள் இதனை வாங்க மனமின்றி இரண்டும் கெட்ட நிலையில் இனி இயலாத கட்டத்திற்கு மீனை வாங்கிச் செல்வர்
காரணம் ஏற்கனவே மீன் மார்க்கெட்டில் மிகவும் குறைந்த உயரத்தில் உள்ள கட்டில் மீன்களை வைத்து வியாபாரம் செய்து முடித்து வியாபாரிகள் விட்டிற்கு சென்ற பின்னர் அந்த இடத்தில் நாய்கள் தூங்குவதனையும் நாய்கள் அதில் உள்ள கழிவுகளை சாப்பிட்டு செல்வதனையும் காணக்கூடியதாக இருந்தது
இதனை கருத்திற் கொண்டு மூதூர் பிரதேசிய சபை குறிப்பாக இதன் செயலாளர் ஜே. நஜாத் உடன் நடவடிக்கை எடுத்து இதனை முறைப்படுத்தி மக்கள் திருப்தியுடன் மீன்களை கொள்வனவு செய்ய உதவியமைக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

