"அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டு"சம்பந்தன்

அப்துல்சலாம் யாசீம்-
ற்றவரையில் இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இனிவரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டுமென எதிர் கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பூர்- நாவலடி பிரதான வீதிப்பணிகள் நிறைவடைந்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச்சந்தியில் இன்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் கே.துறைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனார்டோ ,கிழக்கு மாகாண அமைச்சர்களான .சி.தண்டாயுதபாணி,ஆரியவதிகலப்பதி,துரைராஜசிங்கம், மாகாண உறுப்பினர் கே..நாகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் சம்பந்தன் குறிப்பிடுகையில்;

 இந்த நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதனை நாங்கள் அவதானிக்கின்றோம்.அதற்கு காரணம் மக்கள் மத்தியில் சமாதானம் ஒரு நல்லிணக்கம் மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என தற்போதைய அரசின் கொள்கையாக இருப்பதேயாகும்.

அத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டியுள்ளது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டுமாகவிருந்தால். தேயில்லாத பிரச்சனைகளை உருவாக்காது எல்லோரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்

இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் இந்தநாட்டில்தான் வாழ்ந்தாக வேண்டும்.வேறு வழியில்லை அதுவே சிறந்தவழியாகும். நீண்டகால யுத்ததின் பின்னர் இந்த நல்லாட்சி சூழல் எற்பட்டுள்ளது.தற்போது இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று இயங்கி வருகிறது.அதில் இரண்டு பிரதான கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதற்குள் சிறு சிறு குளப்பங்களை ஏற்படுத்த யாரும் முயலக்கூடாது.சிலர் அவ்வாறு முயற்சிக்கின்றனர்.

பாராளுமன்றம் அரசிலமைப்புச்சபையாக மாற்றப்பட்டுள்ளன.பல குளுக்கள் அமைக்கப்பட்டு கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் எதிர் பார்க்கின்றோம் ஒரு அரசில் சாசனம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் ஒரு அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. 

அந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் அந்த சாசனம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் முலம் சகல மக்களது விருப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் அந்த அரசியல் சாசனம் சகல பிரிவு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். 

இந்த நாட்டின் பெரும் பான்மையின மக்கள்இதமிழ்மக்கள்இதமிழ் பேசும் முஸ் லீம் மக்கள் ஆகியோரால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்அவ்வாறான ஒரு முயற்சியே இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இற்றவரையில் இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.ஆகவே நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்

இன்றைய நிகழ்வைப்பொறுத்தவரை இந்த சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா? என்ற கேள்வியே நிலவி வந்தது. நாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மக்கள் மீழக்குடியமர்த்தப்படும் நிலமைஏற்பட்டுள்ளது. 

சம்பூரில் உள்ள மக்களின் காணிகள் தொழிற்சாலைகள்களுக்கு எடுக்கப்பட்ட நிலையில் அவை நிறுத்தப்பட்டு மக்களுக்க வழங்கி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இன்னும் அனல் மின்நிலயத்திற்கு ஒதுக்கிய காணி 500ஏக்கர்.மற்றும் அதற்கான நீர் நிலக்கரி கொண்டு செல்லவென பாதைகளுக்காக எடுக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்பொழுது பல காரணங்களால் அனல் மின்நிலயம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட்டால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

பல வாழ்வாதார தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கோரி வருகின்றனர். அதனை அவர்கள் திருப்பித்தரவேண்டும் என விரும்புகின்றார்கள்.அவற்றை நாம் தீர்த்து மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அதனை ஏல்லோரும் இணைந்து அதனை நாம் தீரக்க வேண்டியுள்ளது.

மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. அதனை அவர்கள் கடிதங்கள் மூலம் தந்துள்ளனர். 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. அதன்மூலம் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவ்வாறே வடகிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் எல்லோரும் எல்லா மாவட்டங்களிலும் பூரணமாக தமது தேவைகள் நிறைவேற்றப்பட்டு மீழக்குடியமரத்தப்பட வில்லை.

அந்த வகையில் இங்குள்ள மக்களுக்கும் பல தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அவற்றை படிப்படியாக நிறைவேற்ற சம்பந்தப்பட்டோர் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என நாம் சந்திப்புகிளில் எல்லாம் வலுயுறுத்தி வருகின்றோம் எனவே மக்களும் இவற்றைப்புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் இரா.சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -