முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 21 பேரும் கையொப்­ப­மிட்ட கடிதம் ஜனாதிபதியிடம்

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 21 பேரும் கையொப்­ப­மிட்ட கடிதம் ஒன்று நேற்றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­று மாலை ஜனா­தி­ப­தி­யுடன் இடம்­பெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் சந்­திப்­பின்­போதே இக் கடிதம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவின் ஒருங்­கி­ணைப்பில் எழு­தப்­பட்ட இக் கடி­தத்­தி­லேயே சகல முஸ்லிம் எம்.பி.க்களும் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

நாட்டில் சம­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத பிர­சா­ரங்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் சட்­டத்தை நிலை­நாட்­டு­மாறும் இக் கடிதத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -