கல்முனை சுலக்ஷனாவின் கொலைக்கு, மரண தண்டனை வழங்குக - அம்மாக்கு நீதி கேட்டு மகளும் களத்தில்

சுலைமான் றாபி-
ண்மையில் படுகொலை செய்யப்பட்ட வங்கி முகாமையாளர் கல்முனை சுலக்ஷனாவின் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி இன்று (14) காலை கல்முனையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடாத்தப்பட்டது. இதில் படுகொலை யெ்யப்பட்ட சுலக்ஷனாவின் மகள் தனது அம்மாவின் கொலைக்கு நீதி கேட்டு களத்தில் குதித்த சம்பவம் அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்துள்ளது.

இதேவேளை இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது டயர்கள் எரிக்கப்பட்டதுடன், கொலையை ஒப்புக் கொண்ட கொலையாளி சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி அனுசரணை வழங்கக் கூடாது என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை கொடு, அல்லது எங்களிடம் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை மக்கள் ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இறுதியில் சுலக்ஷனாவின் மகள் தனது அம்மாவின் கொலைக்கு நீதி கேட்டு விஷேட மகஜர் ஒன்றினை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் கையளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -