நல்லாட்சியில் நம்பிக்கை இல்லாத போதும் நாட்டின் நீதியில் நம்பிக்கை வைக்கலாம் - நாமல் ராஜபக்ஷ

ல்லாட்சி குறித்த நம்பிக்கை எம்மிடம் சிறிதும் காணப்படாத போதும், நாட்டின் நீதியில் இன்னும் நம்பிக்கை வைக்க முடியும் என்பது இன்று உறுதியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யோசித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்திலிருந்து செல்லும் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மிக விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் மூலம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ.

இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -