சம்பூர் சிறுவன் மரணம் தொடர்பாக கைதான சிறுவனுக்கு விளக்கமறியல்..!

எப்.முபாரக்-
திருகோணமலை, சம்பூர் 07ஆம் வட்டாரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து குகதாஸ் தர்சன் என்ற 06வயதுச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 15 வயதுச் சிறுவனை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட்டார்

சம்பூர் 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவன் கடந்த மாதம் 25ஆம் திகதி மாலை காணாமல் போயிருந்த நிலையில், அதே தினம் நள்ளிரவு அந்தப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.

சடலத்தின் வயிற்றில் கல்லொன்று கட்டப்பட்டிருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் வீட்டிலிருந்த 15 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -