வெலிக்கடை சிறைச்சாலையில் மஹிந்த ராஜபக்ஷ..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடவே இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.எஸ்.என். நிறுவனத்தின் ஏனைய உறுப்பினர்களையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது சந்தித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -