அபிவிருத்தி பணிகளை தடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மட்டுமே உரிமை உண்டு - அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்-
மிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக மலையக மக்களுக்கு 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு செயல்படும் அபிவிருத்தி பணிகளும் பெற்றுக்கொடுக்கும் உரிமைகளையும் தடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாத்திரமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் உரிமை இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 15.01.2016 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்..

மலையக மக்களுக்கு 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்தாண்டு வேலைத்திட்டம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஐந்தாண்டு வேலைத்திட்டமாக முன்னேடுக்கப்படவுள்ளது.

இதில் கல்வி, காணி உரிமை, வீட்டு உரிமை போன்ற அபிவிருத்தி பணிகள் துரித கதியில் முன்னெடுக்கபடவுள்ளது. இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாரான நிலையில் இருக்கின்றார்கள்.

எனவே தோட்ட தொழிலாளர்கள் எவருடைய பசப்பு பேச்சுகளுக்கும் செவிகொடுக்காது ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை காணும் வழியினை அடைய வேண்டும் என்பதை இத் தை பொங்கல் தினத்தில் சவாலாக கொண்டு செயல்படுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -