சல்மா ஹம்சாவுக்கும் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு..!

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப் பொன்று (24.10.2015) காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடைய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் பிரதிநிதி எச்.ஹெசன் மற்றும் அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பேர்ட்டி ஹீன்பல மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் நிதியுதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடைய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதறகாக அவர்களுக்கு சிறு கைத்தொழில் தொடர்பான உற்பத்திப்பயிற்சியினை வழங்கி அவர்களின் வாழ்வதாரத்தை ஊக்குவித்து நாளொன்றுக்கு 400 ரூபா முதல் 500 ரூபாவரையிலான வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் பொருட்டு இந்த சிறுகைத் தொழில் திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 30 வயதுக்குமேற்பட்ட கனவனை இழந்த விதைப் பெண்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என 100 பெண்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் திருமதி சல்மா ஹம்சா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -